சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரனின் நேரடி மேற்பார்வையில் இந்தத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் ‘ராம நாராயணன் அணி’ மற்றும் ‘நலம் காக்கும் அணி’ என இரு அணிகள் நேருக்கு நேர் மோதின. மொத்தம் உள்ள சங்க உறுப்பினர்களில் 1,524 பேர் இந்தத் தேர்தலில் ஆர்வத்துடன் பங்கேற்றுத் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

தமிழ்க்குமரன் வெற்றி

வாக்கு எண்ணிக்கை முடிவில், நலம் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.எம் தமிழ்குமரன், 788 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரலாற்றிலேயே தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்றவர் என்ற தனிச்சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

மேலும், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகளும், இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் 715 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

துணை தலைவராக ஆர்.கே.சுரேஷ் வெற்றி

தயாரிப்பாளர் சங்க தேர்தல் – துணைத் தலைவராக போட்டியிட்ட ஆர்.கே. சுரேஷ் 626 வாக்குகள் பெற்று வெற்றி. இவர்கள் தவிர இதர நிர்வாகிகளும் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடைந்ததும், புதிய தலைவராகத் தேர்வாகியுள்ள ஜி.கே.எம் தமிழ்குமரன் தலைமையிலான குழுவினர் 2029-ஆம் ஆண்டு வரை பொறுப்பில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.