ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் ஒரே நாளில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை எல்லைக்குள்  மீன்பிடித்ததாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

​படகுகள் பறிமுதல்:

மீனவர்களைக் கைது செய்தது மட்டுமின்றி, அவர்களின் 4 பேரின் பல லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்று அங்குள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஒரே நாளில் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க தமிழக அரசும் இந்திய கடற்படையினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது அவர்களது குடும்பத்தினரையும், மீனவ மக்களையும் மிகுந்த சோகம் அடைய செய்துள்ளது. இலங்கை கடற்படை அத்துமீறி நடவடிக்கை எடுத்து மீனவர்களை கைது செய்து இருப்பதாகவும், எனவே அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது