தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் சமீபத்தில் பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் இந்த விவாதத்தை சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசு தரப்பிலும் விளக்கங்கள் அழைக்கப்பட்டு உள்ளன.

₹5,000 வழங்கப்பட்டதற்கான காரணம் : வழக்கமாக மாதம் ₹1,000 வழங்கப்படும் நிலையில், திடீரென ₹5,000 வழங்கப்பட்டது.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.​முன்பணம் ரூ.3,000, அதாவது பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது.

​கோடைகால சிறப்பு நிதி:-

கோடைகால வெப்பத்தைச் சமாளிக்கவும், குடும்பச் செலவுகளுக்காகவும் கூடுதலாக ரூ.2,000 சிறப்புத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அரசு சொல்லும் விளக்கம்

​தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் ‘நடத்தை விதிகள்’ அமலுக்கு வரும். அப்போது அரசு நிதியை விடுவிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தைத் தடுக்க முயற்சிப்பதாகக் கூறி, அரசு முன்கூட்டியே பணத்தைச் செலுத்தியுள்ளது.
​”தேர்தல் நேரத்தில் உரிமைத் தொகை வழங்குவதைத் தடுக்கச் சிலர் சூழ்ச்சி செய்வதால், மகளிருக்குச் சேர வேண்டிய உரிமை தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது வழங்கப்பட்டுள்ளது.” – அரசு தரப்பு விளக்கம்.

​நிதி முறைகேடு புகாருக்கு விளக்கம்

​மகளிர் உரிமைத் தொகைக்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதி மாற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதற்குத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது.
​திட்டத்திற்கான நிதி முறையாக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு, நிதி விதிகளின்படியே வழங்கப்படுகிறது.
​ஆதிதிராவிடர் நலனுக்கான எந்த நிதியும் இதற்காகத் திசைதிருப்பப்படவில்லை என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

​எதிர்காலத் திட்டம்

​2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மகளிர் உரிமைத் தொகையை ₹1,000-லிருந்து ₹2,000 ஆக உயர்த்தி வழங்குவோம் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.

.