சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் டிக்கெட் வழங்கும் மின்னணு இயந்திரங்கள் சர்வர் கோளாறு காரணமாக செயலிழந்திருப்பது பயணிகளிடையே சலுக்சலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 “ஸ்கேன்” பண்ண முடியல!

​சென்னையில் இயக்கப்படும் பெரும்பாலான மாநகரப் பேருந்துகளில் நடத்துனர்கள் பயன்படுத்தும் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் இன்று காலை முதல் திடீரென வேலை செய்யவில்லை. இதற்குத் தொழில்நுட்ப ரீதியான சர்வர் கோளாறு தான் முதன்மைக் காரணம் என்று கூறப்படுகிறது.

​பழைய முறைக்கு மாற்றம்:

இயந்திரங்கள் இயங்காததால், நடத்துனர்கள் மீண்டும் பழைய முறையான காகித டிக்கெட்டுகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

​பயணிகள் அவதி:

சில்லறை தட்டுப்பாடு மற்றும் டிக்கெட் வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாகப் பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

​நிர்வாகத்தின் நடவடிக்கை
​போக்குவரத்துத் துறை தரப்பில் இந்தப் பிரச்சனையைக் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
​”தொழில்நுட்பக் குழுவினர் சர்வர் கோளாறைச் சரிசெய்து வருகின்றனர். விரைவில் அனைத்துப் பேருந்துகளிலும் மின்னணு இயந்திரங்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.