சேலத்தில் நடைபெற்ற விஜய் சந்திப்பு கூட்டத்தில், உயிரிழந்த சிராஜின் உடலை வாங்க மறுத்ததுடன், தவெகவினர் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் நேற்று சுராஜ் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இவர் சேலத்தில் வெள்ளிப்பட்டறையில் பணியாற்றி வந்தார். விஜய் கூட்டத்தில் பங்கேற்பதற்கு பாஸ் கொடுக்கப்பட்ட 5,000 பேரில் இவரும் ஒருவர். கூட்டத்தின் போது கடும் வெயிலில் நின்றதால் மயங்கி விழுந்து அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுவரை தவெகவைச் சேர்ந்த யாரும் வந்து தங்களை சந்தித்து ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

மற்றொரு பக்கம் கூட்டத்தில் உயிரிழந்த சிராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும்; அவர் உயிரிழந்ததாக செய்தி வெளியான போதும் காவல்துறையினர் தங்களை சுராஜை பார்க்கவும், அவரின் உறவினரை பார்க்கவும் அனுமதிக்கவில்லை என்று சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் குற்றம்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.






