திருவண்ணாமலை : இலவசமாக ஐஸ் கொடுத்து ஏமாற்றி சிறுமிக்கு பாலியல் தொல்லை : பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி?

திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு இலவசமாக ஐஸ் கொடுத்து ஏமாற்றி பாலியல் தொந்தரவு அளித்த ஐஸ் வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகேயுள்ள வடஇலுப்பைக் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். 45 வயதான ஐஸ் வியாபாரியான. இவர்,
வெம்பாக்கம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு  அடிக்கடி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

அரசுப் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படிக்கும் இச்சிறுமிக்கும், இவரது தங்கை, 2 தம்பிகளுக்கும் என 4 பேருக்கும் அடிக்கடி இலவசமாக ஐஸ் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சீனிவாசன் அந்த சிறுமியிடம் பலமுறை பாலியல் அத்திமரத்தின் ஈடுபட்டுள்ளார் இந்நிலையில் வெளியூர் சென்று வேலை பார்த்து வரும் அச்சிறுமியின் பெற்றோர் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்ற போது, சிறுமிக்கு நடந்த துயரமறிந்து கோவமடைந்தனர்.

ஐஸ் வியாபாரி கைது

இதுகுறித்து, செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், ஐஸ் வியாபாரி சீனிவாசனை நேற்று மாலை கைது செய்தனர்