சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது சீமான் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பின்னர் கைது செய்யப்பட்டார்.

​சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில், தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் (ஊரக மற்றும் நகர்ப்புறப் பணியாளர்கள்) ஊதிய உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிக்க சீமான் முயன்றார்.

​கைது நடவடிக்கை:

அந்த இடத்தில் போராட்டம் நடத்தவோ அல்லது போராட்டக்காரர்களைச் சந்திக்கவோ காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். தடையை மீறி அவர் உள்ளே செல்ல முயன்றதால், காவல்துறையினருக்கும் சீமானுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டார்.

களத்தில் குதித்த நாதக தொண்டர்கள்

சீமான் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதும், அப்பகுதியில் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.