சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே (India Today) தென்னிந்திய மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது, தமிழக அரசின் “திராவிட மாடல்” என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது உள்ளடக்கிய வளர்ச்சியின் அடையாளம் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார். சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை இணைப்பதே இந்த மாடலின் வெற்றி என்று அவர் விவரித்தார்.

கூட்டாட்சித் தத்துவம் (Federalism)
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காக்க கூட்டாட்சித் தத்துவம் மிக அவசியம் என்றும் நிதிப் பகிர்வில் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் களையப்பட வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி
தமிழகம் இந்தியாவின் கல்வி மற்றும் பொருளாதார மையமாக திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

கூட்டாட்சி முறை ஒத்துவராது!
“கூட்டணியில் முறிவு ஏற்படுவதற்காக ஆட்சியில் பங்கு என்பதை சிலர் கிளப்பி விடுகின்றனர். அது எடுபடாது” என்றார்.
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பது காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றாக தெரியும்.
அரசியலை தாண்டி ராகுல் காந்தியை ஒரு சகோதரராக பார்க்கிறேன். அவரும் அப்படித்தான். திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து இருக்கும்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
ஆட்சியில், பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் முன்வைக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.






