September 10, 2026

பொன்னேரி : மனைவியை கொலை செய்துவிட்டு உயிரிழந்ததாக நாடகம் : கணவரும், அவரின் காதலியும் கைது

பொன்னேரி அருகே திருமணமான 5 மாதத்தில் மனைவியை கொலையில் திகிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன. மனைவி வீட்டில் விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய கணவரையும், உடந்தையாக இருந்த கல்லூரி மாணவியையும் போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேயுள்ள பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளியான ராஜேஷ். இவருக்கும், அத்திவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதன கவுசல்யா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

மரணத்தில் மர்மம்

இந்நிலையில், கவுசல்யா கடந்த 5-ஆம் தேதி வீட்டில் தரையில் சிந்தியிருந்த சமையல் எண்ணெயில் கால் வைத்த போது, வழுக்கி விழுந்ததில், தலையில் படுகாயமடைந்து உயிரிழந்ததாக ராஜேஷ், கவுசல்யாவின் தந்தை முருகனிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், கவுசல்யாவின் முகத்தில் நக கீறல்களும், உதடு, தலை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததால், கவுசல்யாவின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து, கவுசல்யாவின் தாய் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கள்ளத்தொடர்பு அம்பலம்

விசாரணையில், கவுசல்யாவின் கணவர் ராஜேஷுக்கும், அவரது உறவுக்கார பெண்ணும், கல்லூரி மாணவியுமான தீபிகாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இருவரும் கூட்டு சேர்ந்து மனைவி கௌசல்யாவை கொலை செய்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, ராஜேஷையும், கல்லூரி மாணவியான தீபிகாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

You may have missed