September 10, 2026

நாகை : மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை : குற்றவாளி சிறையில் அடைப்பு

நாகை அருகே மனவளா்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரைச் சோ்ந்தவா் முருகேசன். கொத்தனாரான இவர், மனநலம் குன்றிய பெண் ஒருவரை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பகுதியினா் வந்ததையடுத்து அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினா் அளித்த புகாரின் பேரில், நாகை அனைத்து மகளிா் காவல்நிலையப் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், முருகேசன் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு முயன்றது உறுதியானது. இதையடுத்து போலீஸாா் முருகேசனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா்.

You may have missed