கூட்டணி இழுபறி நீடித்து வருவதால், கூட்டணி அறிவிப்பு குறித்தான தேதியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மாற்றியுள்ளார்.
பிப்ரவரி மாதம் 3ஆம் தேதியான இன்று, கூட்டணி முடிவை அறிவிப்பேன் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா கூறியிருந்தார். தற்போது, தனது முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டார்.

இதற்கு முக்கிய காரணம் சீட் விவகாரம் என சொல்லப்படுகிறது. தேமுதிகவை கூட்டணியில் திமுகவில் 5 சீட்கள் என்று பேசப்பட்டு, தற்போது 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக தரப்பினரோ! ஒரு ராஜ்யசபா தொகுதியும்; 9 சட்டமன்ற தொகுதிகளையும் மட்டும் ஒதுக்க தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பிரேமலதா விஜயகாந்த் கடும் அதிருப்தியில் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதனால், கூட்டணி அறிவிப்பை தாமதப்படுத்தியுள்ள பிரேமலதா, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவா? தவெகவா என கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்கிறாராம்.






