தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னோடியான பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதற்கு திமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆங்கிலத்தில் காணொளி அமைதி பேரணியாக செல்ல அமைப்பில் சென்று மெரினா கடற்கரை உள்ள அண்ணாவை நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அண்ணாவின் கொள்கை வழியில் திமுக..
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழகத்தின் நவீன சிற்பி பேரறிஞர் அண்ணா காட்டிய ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற வழியில் இந்த அரசு வீறுநடை போடுகிறது. மாநில சுயாட்சி மற்றும் சமூக நீதி கொள்கைகளில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்” என உறுதிபடத் தெரிவித்தார்.
அரசின் திட்டங்கள் குறித்த விளக்கம்
அரசு திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், “மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் அண்ணாவின் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற வரிகளுக்கு ஏற்பச் செயல்பட்டு வருகின்றன.
அண்ணா உருவாக்கிய பெயர் மாற்றமான ‘தமிழ்நாடு’ என்ற பெருமையை உலக அரங்கில் உயர்த்தத் தொடர்ந்து பாடுபடுவோம்” என்றார்.
மேலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதி கொடுப்பவர்கள் நாங்கள் அல்ல; சொன்னதைச் செய்வதோடு, சொல்லாததையும் செய்யும் அரசு இது. விமர்சனங்களுக்கு எங்களின் மக்கள் நலப்பணிகளே பதில் சொல்லும்” என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
கலைஞர் நினைவிடத்திலும் அஞ்சலி
மேலும், முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் அனைவரும், அண்ணா நினைவிடத்தைத் தொடர்ந்து, அருகில் உள்ள கலைஞர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர்.






