தொடர்ந்து 2வது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி விலை பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவோர், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரண தங்கமும், வெள்ளியும் மீண்டும் விலை குறைந்துள்ளது.

தங்கம் கிராமுக்கு ரூ. 950 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைந்து ரூ. 1,26,800க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் ஒரு சவரன், ரூ. 7,600 குறைந்து ரூ. 1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று மதியம் சவரனுக்கு மேலும் ரூ.2,800 குறைந்து ரூ. 1,16,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று குறைந்த வெள்ளி விலையும், இன்று மேலும் ரூ. 55 குறைந்து ஒரு கிராம் ரூ. 350க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கிலோவுக்கு ரூ. 55,000 குறைந்து ஒரு கிலோ ரூ. 3,50,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் வெள்ளி விலை காலையில் ரூ.55 ஆயிரம் குறைந்த நிலையில் பிற்பகலில் மேலும் ரூ.30 ஆயிரம் குறைந்துள்ளது.வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.85,000 குறைந்து ஒரு கிலோ ரூ.3,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.