“எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள், மொழி கற்கும் முடிவை மக்களிடமே விட்டுவிடுங்கள்” என்று தனியார் தொலைக்காட்சியின் போது, மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் பிரபலமான செய்தி தொலைக்காட்சி ஒன்று, தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “அன்பு ஒரு போதும் விஷமமாக மாறக்எங்கள்ஏகூடாது; மொழியும் அப்படித்தான். என்னிடம் யாரும் மொழியை திணிக்க முடியாது.
நான் 27 வயது வரை இந்தி மொழியை கற்றுக் கொள்ளவே இல்லை; ஒரு வார்த்தை கூட தெரியாது; பிறகு பேசும் அளவிற்கு இந்தி கற்றுக்கொண்டேன், ஆனாலும் இந்தி எழுதத் தெரியாது…” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நான் மூன்று மொழிகளில் நன்கு பரிட்சயம் பெற்றவன். ஒன்று தமிழ், இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவது சினிமா; சினிமாவால் எல்லா மொழியையும் பேச முடியும்” என்றும் கூறினார்.
“மொழி என் பண்பாட்டுப் பெருமை. என் மொழியை நேசிக்க, நான் பிற மொழியை வெறுக்க வேண்டியதில்லை; எங்கள் மீது எதையும் திணிக்காதீர்கள், அந்த முடிவை மக்களிடமே விட்டுவிடுங்கள்; வாழ்க்கைக்கு தேவை என்றால் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.






