சென்னையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஒரு இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
சென்னை நந்தனம் பகுதியில் உள்ள அரசு ஆடவர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டீனில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் இந்த கேண்டீனில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அந்தப் பெண்ணை கேண்டீன் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் என 3பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் யார்?
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பின்வரும் மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.
கைதாகியுள்ள முத்துச்செல்வன் (எ) செல்வம், இவர் கடந்த 11 ஆண்டுகளாக இந்தக் கல்லூரியின் கேண்டீனை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருபவர். இவர் பாஜக ஆதரவாளர் ஆவார். மேலும், கேண்டீனில் வேலை பார்த்தகுணசேகரன், கார்த்திகேயன் ஆகிய இவரும் கைதாகியுள்ளனர்.
ஆசை வார்த்தைகள் கூறி!
அந்தப் பெண்ணின் குடும்ப வறுமை மற்றும் தனிப்பட்ட சூழலைப் பயன்படுத்திக் கொண்ட முத்துச்செல்வன், அவருக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
கூட்டு பாலியல் வன்கொடுமை:
முத்துச்செல்வனின் நண்பர் கார்த்திகேயன் மற்றும் சமையல்காரர் குணசேகரன் ஆகியோரும் அந்தப் பெண்ணை மிரட்டி வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கல்லூரியில் வைத்தே எப்படியா?
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லூரி போன்ற ஒரு கல்வி நிறுவன வளாகத்திற்குள்ளேயே இத்தகைய சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பையும், பாதுகாப்புக் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.






