இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9520 உயர்ந்துள்ளது, மக்களை பெரும் அதிர்சசியடைய செய்துள்ளது.
உயரும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வியாழக்கிழமை காலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இது தங்கம் மற்றும் வெள்ளி வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

இன்று தமிழ்நாட்டில், ஒரு கிராம் தங்கம் 1190 ரூபாய் உயர்ந்து 16,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரனுக்கு 9520 ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து, 34 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளி 25 ரூபாய் உயர்ந்து ரூ.425க்கு விற்பனை செய்யப்படுகிறது.






