விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன

சிவகாசி, வெம்பக்கோட்டை ஒன்றியம்  இராமுத்தேவன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

சிவகாசியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட “பிராக்கியா அகடாமி” சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 ஆயிரம் ஆயிரம் மதிப்புள்ள சீருடைகளை பிரியதர்ஷினி, சுரேந்திரன் ஆகியோர் வழங்கினர். போட்டியினை முன்னாள் அரசு வழக்கறிஞரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான நல்லதம்பி தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாத்தூர், ஆலங்குளம், சிவகாசி, கோவில்பட்டி, எதிர்கோட்டை, எட்டக்கப்பட்டி, ராமுத்தேவன்பட்டி உள்பட  50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.

எதிர்கோட்டை அணி வெற்றி

இறுதிப் போட்டியில் எதிர்கோட்டை, ராமு தேவன்பட்டி ஆகிய இரு அணிகள் மோதின. இதில் எதிர்கோட்டை அணி வெற்றி பெற்றது.

பரிசளிப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளராக வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளர் நம்பிராஜன், கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வெற்றி பெற்ற அணியினருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.