September 10, 2026

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய்யிடம் கிடுக்குப்பிடி விசாரணை

டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது. அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளால் விஜய் குழம்பியுள்ளார்.

​டெல்லி சிபிஐ விசாரணை

​கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக கட்சியின் பரப்புரை கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக 41பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI) விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான விசாரணைக்காகவே தவெக தலைவர் விஜய் 2வது முறையாக டெல்லி சென்றுள்ளார்.

இன்று காலை விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜரானார்.

இரண்டாம் கட்ட விசாரணை:

ஏற்கனவே ஜனவரி 12-ஆம் தேதி முதல்முறையாக அவர் ஆஜராகி 6 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தற்போது இது 2வது கட்ட விசாரணையாகும்.

விசாரணையின் பின்னணி:

கரூரில் நடந்த கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கட்சியின் தலைவர் என்ற முறையில் விஜய்யிடம் விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது.

விசாரணையின் முக்கிய அம்சங்கள்:

நேர தாமதம்: திட்டமிடப்பட்ட நேரத்தை விட விஜய் கூட்டத்திற்கு சுமார் 7 மணி நேரம் தாமதமாக வந்ததற்கும், அதனால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்ததற்கும் என்ன காரணம்?

பாதுகாப்பு ஏற்பாடுகள்: கட்சியின் சார்பில் போதுமான தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா?

முன்னெச்சரிக்கை: கூட்ட நெரிசல் குறித்து காவல்துறையினர் அளித்த எச்சரிக்கைகள் பின்பற்றப்பட்டதா?

விஜய்யின் அடுத்தகட்ட திட்டம்

அடுத்தகட்டப் பணிகள்
​டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் விஜய், நாளை கட்சியின் தேர்தல் அறிக்கை குழுவின் முதல் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைகளை இதன் மூலம் அவர் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறார்.

You may have missed