September 10, 2026

நெல்லை போலீசாரின் ரோந்து : சிக்கிய 4.5 கிலோ கஞ்சா

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம், குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படி அங்கு சிலர் நின்றுக்கொண்டிருத்தனர். அவர்களை போலீசார் நெருங்கும் போது, அங்கு நின்று கொண்டிருந்த நபர்களில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பீர் முஹம்மது என்பவர் தப்பி ஓடிவிட, மற்ற நபர்களை போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவர்கள் திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்த ராசப்பன், பஷீர் மகன் முஹம்மது ஹுசைன் மற்றும் முஹம்மது பாதுஷா என்பதும் அவர்களிடமிருந்து சுமார் 4.5 கிலோ கிராம் கஞ்சாவை பதுங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சாவை
மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

You may have missed