நடிகை நிதி அகர்வால், தற்போது இந்தியத் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நடிகையாகத் திகழ்ந்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் அவர் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வருவது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

​தற்போது நடிக்கும் படங்கள்:

​தி ராஜா சாப் (The Raja Saab): நிதி அகர்வாலின் திரையுலகில் மிக முக்கியமான படமாக இது கருதப்படுகிறது. ‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் ​’தி ராஜா சாப்’ என்னும் திரைப்படம் தான். இந்தப் படத்தில், நிதி அகர்வால் ஒரு முக்கிய நாயகியாக நடித்துள்ளார்.

இப்படம் வரும் 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது ஒரு ஹாரர்-காமடி படம் என்று டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

“ஹரி ஹர வீர மல்லு”

பவன் கல்யாண் நடிப்பில் உருவான “​ஹரி ஹர வீர மல்லு” என்னும் பீரியட் ஆக்சன் திரைப்படத்தில் நிதி அகர்வால் நடித்துள்ளார். இந்தப் படம் நீண்ட கால தயாரிப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகி தோல்வி படமாக நிதி அகவர்வாலுக்கு அமைந்தது.

​புதிய ஒப்பந்தங்கள்:

நிதி அகர்வால் தற்போது மேலும் மூன்று புதிய தெலுங்கு படங்களில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ‘தி ராஜா சாப்’ வெளியான பிறகு அந்தப் படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


​ரசிகர்களிடம் சிக்கிய பதற்றம்:

ஹைதராபாத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் (Lulu Mall) நடந்த ‘தி ராஜா சாப்’ படப் பாடல் வெளியீட்டு விழாவில், நிதி அகர்வாலை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.

கட்டுக்கடங்காத கூட்டத்தில் அவர் சிக்கித் தவித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இதனால் பிரபலங்களின் பாதுகாப்பு மற்றும் ரசிகர்களின் நடத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன.


​பிரபாஸ் உடனான நட்பு:

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் பிரபாஸ் அனைவருக்கும் வகை வகையான உணவுகளை வழங்கி உபசரிப்பது பற்றி நிதி சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜாலியாகப் பேசியிருந்தார். “எங்கள் டயட்டை பிரபாஸ் கெடுத்துவிடுவார்” என அவர் நகைச்சுவையாகக் கூறியது ரசிகர்களிடையே ரசிக்கப்பட்டு வருகிறது.


சினிமா நிகழ்ச்சி என்றாலும் சரி; “ஃபோட்டோ ஷூட்” என்றாலும் சரி தனது அழகிய உடலை நடிகை நிதி அகர்வால் நன்றாக காட்டக் கூடியவர். அவரின் அழகிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தலங்களில் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.