உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல் படுத்துவத்தியதை அடுத்து, அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவித்துள்ளதை பார்ப்போம்..

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம்
- அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்
- தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம்
- அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சம் மிகாமல் பணிக்கொடை.
- ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு 2 மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
- ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்
- பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம்.

கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த கோரி.., பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
முதல்வர் ஜெ.ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி, எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முதல்வராக இருந்தபோது செயல்படுத்த முடியாத, இந்த திட்டத்தை தற்போதைய முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளதை அனைத்து அரசு ஊழியர்களும் பாராட்டு வரவேற்று உள்ளனர்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால், அனைத்து அரசு பணியாளர்களின் வாக்குகளையும் ஸ்டாலின் பெற்றுவிட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.






