டிஜிட்டல் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில் “இரயில்ஒன்” (Rail One) செயலியில் அனைத்து டிஜிட்டல் கட்டண முறைகள் மூலமாகவும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை எடுக்கும்போது 3 சதவீதம் தள்ளுபடி வழங்க இந்திய இரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது ஜனவரி 14, 2026 முதல் ஜூலை 14, 2026 வரை அமலில் இருக்கும்.

தற்போது R-Walletக்கு மட்டுமே கேஷ்பேக் இருந்தது. இப்போது அனைத்து டிஜிட்டல் பேமெண்ட் வழியாகவும் இந்த 3% தள்ளுபடி கிடைக்கும்.
“இரயில் ஒன்”
செயலி
இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க இந்திய ரயில்வேயின் புதிய திட்டமாகும். “ரயில் ஒன்” செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரயில் ஒன் செயலியில் R-Wallet- மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தற்போது வழங்கப்படும் 3 சதவீத கேஷ்பேக் சலுகையும் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் இந்திய இரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.






