தமிழக காவல் துறையில் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரே நாளில் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக அரசு 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிகள், 2 கூடுதல் எஸ்பிக்களுக்கு பதவி உயர் மற்றும் பணியிட மாற்றம் அளித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்வா் தயாள் நியமிக்கப்பட்டுள்ளாா். அதேபோல தாம்பரம், ஆவடி, கோவைக்கு புதிய காவல் ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்):
மகேஷ்வா் தயாள்: சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி (சிறைத் துறை ஏடிஜிபி)
கே.சங்கா்: சிறைத் துறை ஏடிஜிபி (ஆவடி காவல் ஆணையா்)
அபின் தினேஷ் மொடக்: மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி (தாம்பரம் மாநகர காவல் ஆணையா்)
எஸ்.டேவிட்சன் தேவாசீா்வாதம்: ஆயுதப் படை டிஜிபி (சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி)
சந்தீப் மிட்டல்: சைபா் குற்றப் பிரிவு டிஜிபி (சைபா் குற்றப் பிரிவு ஏடிஜிபி)
பி.பாலநாகதேவி: பொருளாதார குற்றப் பிரிவு டிஜிபி (பொருளாதார குற்றப் பிரிவு ஏடிஜிபி)
டி.எஸ்.அன்பு: சிபிசிஐடி ஏடிஜிபி (சிபிசிஐடி ஐஜி)
பிரேம் ஆனந்த் சின்ஹா: ஆவடி காவல் ஆணையா் (தென் மண்டல ஐஜி)
தீபக் எம்.தாமோா்: ஏடிஜிபி மத்திய அரசுப் பணி (மும்பை சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு ஐஜி)
டி.செந்தில்குமாா்: தலைமையிட ஏடிஜிபி (மேற்கு மண்டல ஐஜி)
அனிஷா உசேன்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி (சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி)
ஏ.அமல்ராஜ்: தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி)
என்.கண்ணன்: கோவை மாநகர காவல் ஆணையா் (சென்னை காவல் துறை தெற்கு கூடுதல் ஆணையா்)
வி.பாலகிருஷ்ணன்: மத்திய மண்டல ஐஜி (நிா்வாகப் பிரிவு ஐஜி)
விஜயேந்திர எஸ்.பிதரி: தெற்கு மண்டல ஐஜி (சென்னை காவல் துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா்)
கே.எஸ்.நரேந்திரன் நாயா்: சென்னை காவல் துறை தெற்கு கூடுதல் ஆணையா் (தனிப் பிரிவு ஐஜி)
ஏ.சரவண சுந்தா்: மேற்கு மண்டல ஐஜி (கோவை மாநகர காவல் ஆணையா்)
ஜி.ஷேஷாங் சாய்: காஞ்சிபுரம் சரக டிஐஜி (ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்பி)
தேஷ்முக் சேகா் சஞ்சய்: ராமநாதபுரம் சரக டிஐஜி (சென்னை உயா்நீதிமன்ற வழக்கு கண்காணிப்புப் பிரிவு எஸ்பி)
என்.மணிவண்ணன்: திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையா் (ஆவடி சிறப்புக் காவல் படை இரண்டாவது அணி கமாண்டன்ட்)
அர.அருளரசு: விழுப்புரம் சரக டிஐஜி (தீவிரவாத தடுப்புப் படை எஸ்பி)
எஸ்.மகேஷ்வரன்: சென்னை காவல் துறை தலைமையிட இணை ஆணையா் (ஆவடி மாநகர காவல் துறை தலைமையிட துணை ஆணையா்)
பி.சரவணன்: திருநெல்வேலி சரக டிஐஜி (விழுப்புரம் மாவட்ட எஸ்பி)
பி.சாமிநாதன்: திண்டுக்கல் சரக டிஐஜி (ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்பி)
ஏ.ஜெயலட்சுமி: தாம்பரம் மாநகர காவல் துறை இணை ஆணையா் (மனித உரிமைப் பிரிவு எஸ்பி)
ஆா்.சிவக்குமாா்: ஆவடி மாநகர காவல் துறை இணை ஆணையா் (சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி)
தீஷா மிட்டல்: சென்னை காவல் துறையின் வடக்கு மண்டல இணை ஆணையா் (சென்னை காவல் துறையின் மேற்கு மண்டல இணை ஆணையா்)
சந்தோஷ் ஹதிமானி: சேலம் சரக டிஐஜி (திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையா்) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு மண்டல ஐஜி தவிா்த்து 3 மண்டல ஐஜிக்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்த சரக டிஐஜிக்கள் பொறுப்புகளில் பதவி உயா்த்தப்பட்ட புதிய டிஐஜிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தப் பணியிட மாற்றம் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.





