கடையில் திடீரென மர்நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் வடகரோலினாவின் சார்லட் புறநகர் பகுதியில் உள்ள மின்ட் ஹில்லில் ஒரு கடையில் நடந்த நிகழ்ச்சி காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மர்மநபர் ஒருவர், திடீரென காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கியால் சுட்டார். இதனால், காவல்துறை அதிகாரிகளும் துப்பாக்கியால் பதிலடி கொடுத்தனர். இதில் மர்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மர்மநபர் துப்பாக்கியால் சுட்டத்தில் மின்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
துப்பாக்கிச்சூடு நடந்த கடைக்கு அருகில் உள்ள எம்பயர் பீட்சாவில் உள்ள ஊழியர்கள் புகை மூட்டத்தில் இருந்தபோது, இரண்டு அதிகாரிகள் கடைக்குள் செல்வதைக் கண்டதாகவும், பின்னர் அவர்களில் ஒருவர் கைகளிலும் முகத்திலும் ரத்தத்துடன் மற்றவரை வெளியே அழைத்துச் செல்வதைக் கண்டதாக மேலாளர் கெவின் ஃபைம் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக மின்ட் ஹில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





