விஜய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த போது அவருக்கு வயது 18. தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய “நாளைய தீர்ப்பு” என்னும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார்.

சினிம டூ அரசியல்

தற்போது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்னும் கட்சியை ஆரம்பித்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
சினிமாவை தாண்டி, அரசியலில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் சொல்லப்படுகிறது.

இருப்பினும், “ஆரம்பகால கட்டத்திலேயே விஜய்க்கு, மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கி இருந்ததாக..” அவருடைய நண்பர்கள் சிலர் கூறுகிறார்கள்.

நடிகர் தாமு-வின் புகழாரம்!

அந்தவகையில், விஜய்யின் நண்பரும், நடிகருமான தாமு விஜய் பற்றி ஒரு பேட்டியில் ஒரு விசயத்தை சொல்லி இருக்கிறார். “தன்னுடைய முதல் படத்திற்கு வாங்கிய சம்பளத்தில் ஏழை எளியோருக்கு புடவை, உணவு பொருள்களை விஜய் வாங்கிக்கொடுத்தார்” என்று நடிகர் தாமு கூறியுள்ளார்.

அரசியலில் எப்படி?

சினிமாவில் இருக்கும் போது மக்களுக்கு பல உதவிகளை செய்து நல்ல பெயரை சம்பாதித்த நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த போது அந்தப் பெயரை காப்பாற்ற தவறிவிட்டார். இனி அரசியலில் விஜய் என்ன செய்ய போகிறார் எடுத்து பொருத்து விஜய்யின் மக்கள் செல்வாக்கு இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.