வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டு, தொட்டால் சுடும் போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கிய அதில் மாபெரும் வெற்றி கண்டவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், நாகேஷ், லட்சுமி, விவேக், இசையமைப்பாளர் கீரமணி எனப் பல நட்சத்திரங்களை சினிமா உலகில் உயர்த்திய கே. பாலசந்தருக்கு இன்று 11வது நினைவு நாள்.

கே.பி-யின் நினைவுகள்
இந்நிலையில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் குறித்து நடிகரும், மக்கள் நீதி மைய்யத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” எனும் பல முறை கேட்ட தேய்வழக்கு, என் வாழ்வில் திரு. பாலச்சந்தர் அவர்களுக்கும் அவரது தோழர் திரு. நாகேஷ் அவர்களுக்கும் பொருந்தும். இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல…” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்த இயக்குனர் உனக்கு எனக்குப்பின் நீ படிக்க நல்ல இடம்” என்று எனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் இன்று நன்றியோடு நினைத்து வணங்குகிறேன் என்று தனது குருநாதரை நினைவுகூர்ந்து நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

இறுதி கூட்டணி ‘உத்தம வில்லன்’
இறுதியாக நடிகர் கமல்ஹாசனும், இயக்கினார் பாலச்சந்தர் அவர்களும் இணைந்து நடித்த படம், ‘உத்தமவில்லன்’. இந்த படத்தை இயக்கியது பாலச்சந்திரனின் மற்றொரு சீடரான ரமேஷ் அரவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.







