அமெரிக்காவில் மெக்சிகோ கடற்படை விமானம் நொறுங்கி விழுந்து  5 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் நகருக்கு அருகே உள்ள கால்வெஸ்டனுக்கு அருகே நோயாளி உள்பட 7 பேரை ஏற்றிக் கொண்டு மெக்சிகோ கடற்படையைச் சேர்ந்த சிறிய ரக விமானம் சென்றது. இந்த விமானம் ஹூஸ்டனுக்கு தென்கிழக்கே சுமார் 50 மைல் (80.5 கிலோமீட்டர்) தொலைவில் டெக்சாஸ் கடற்கரையில் கால்வெஸ்டனுக்கு அருகிலுள்ள ஒரு தரைப்பாலத்தின் அடிவாரத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து டெக்சாஸ் கடற்கரையில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய விமானத்தில் நான்கு கடற்படை அதிகாரிகள் மற்றும் நான்கு பொதுமக்கள், ஒரு குழந்தை இருந்தனர். அவர்களில் யார் இறந்தவர்கள் என்பது உடனடியகத் தெரியவில்லை.  இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக மூடுபனி நிலவி வருவதாக வானிலை ஆய்வாளர் கேமருன் பாடிஸ்ட் தெரிவித்தார். இந்த விமானம் மருத்துவப் பணிக்கு உதவி செய்து வந்ததாக மெக்சிகோவின் கடற்படை தெரிவித்துள்ளது.