செங்கோட்டையன் முன்னிலையில் பிரபல திரைப்பட நடிகர் ஜீவா ரவி, தவெகவில் இணைந்தார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரான விஜய்யின் மந்தமான செயல்பாடுகளால் பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், தவெக கட்சியில் தொடர்ந்து அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் இணைந்து கொண்டு வருகிறார்கள்.
நேற்று – நாஞ்சில் சம்பத்
நேற்று பிரபல அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் தவெக கட்சியில் இணைந்துள்ளார். “இனி, தம்பி விஜய் உடன் தான் அரசியல் பயணம் என்றும் தவெக கட்சியின் பிரச்சாரத்தில் பங்கேற்று ஆட்சி அமைக்க உறுதுணையாக இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
தவெக-வில் ஜீவா ரவி
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தவெக-வின் தலைமைச் செயலாளரான செங்கோட்டையனின் அலுவலகத்தில் வைத்து, நடிகர் திரைப்பட நடிகர் ஜீவா ரவி, தவெகவில் இணைந்தார்.

செங்கோட்டையனை சந்தித்த பிறகு பேசிய அவர், தற்போது தான் உயிரோடு இருக்க காரணமே செங்கோட்டையன் தான் என நெகிழ்ச்சியுடன் கூறினார். “தனுஷின் ‘3’ மௌன குரு, சாட்டை, இமைக்கா நொடிகள், நெஞ்சுக்கு நீதி, அஜித்தின் விடாமுயற்சி” உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், சீரியல்களில் ஜீவா ரவி நடித்துள்ளார்.
நடிகர் ஜீவா ரவி, இதற்குமுன் திமுகவின் ஆதரவாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.






