தென்காசியில் பட்டப்பகலில் திமுக வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பட்டப்பகலில் துணிகரம்:-

தென்காசியில் பட்டப்பகலில் அலுவலகத்தில் இருந்த திமுகவை சேர்ந்த அரசு வழக்கறிஞரான முத்துக்குமாரசுவாமி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரை வெட்டியதாக கூறப்பட்ட நபர் சாவகாசாமாக நடந்து சென்று தனது இரு சக்கரவாகனத்தில் ஏறி சென்ற புகைப்படங்கள் வெளியானது.


விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

இச்சம்பவம் குறித்து தென்காசி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமியை கொலை செய்தது லாரி ஓட்டுநரான சிவசுப்பிரமணியன் என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான சிவசுப்ரமணியனை தேடி வந்த காவல்துறையினர் அவரது மனைவியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

திருமணத்தை மீறிய தகாத உறவு

வழக்கறிஞர் முத்து முத்துக்குமாரசாமிக்கும் சிவசுப்பிரமணியனின் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்தது தெரிய வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.


சிவசுப்பிரமணியனின் மகளுக்கு உடல்நலம் சரியில்லாத போது வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி தான் உடனிருந்து பார்த்துக் கொண்டாராம். மகள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வழக்கறிஞரின் பாலியல் தொல்லை

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி சிவசுப்பிரமணியனின் மனைவியை உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகின்றது. “மகளை பறிகொடுத்து விட்டு வந்திருக்கிறேன், எனது மகனும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறான் என்னை விட்டு விடுங்கள்” என்று அவர் மறுத்ததாக கூறப்படுகின்றது.

கொலை செய்ய திட்டம்:-

இருந்தாலும் விடாமல் முத்துக்குமாரசாமி டார்ச்சர் செய்ததாகவும், இது குறித்து தனது கணவர் சிவசுப்பிரமணியத்திடம் கூறி அவர் கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை தீர்த்துக் கட்ட திட்டமிட்ட லாரி ஓட்டுனர் சிவசுப்பிரமணியன், முதலில் தனது மனைவியின் சகோதரர் சதீஷை அழைத்து தனது மனைவி குழந்தைகளை பத்திரமாக “சென்னைக்கு அழைத்து போ…!” எனக்கூறி விட்டு கையில் அரிவாளுடன் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி அலுவலகத்திற்கு சென்று அவரை சரமாரியாக வெட்டி விட்டு கேரளா மாநிலத்திற்கு தப்பி ஓடி விட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் தப்பி ஓடிய சிவசுப்பிரமணியனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கணவன் வெளி ஊர்களுக்கு சென்று வேலை பார்க்கும் சமயத்தில், மனைவி வேறொரு ஆணுடன் தொடர்பிலிருந்ததால் தற்போது அந்த குடும்பமே! சிதைத்து விட்டது.