அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படம் ‘அஞ்சான்’ – இயக்குநர் லிங்குசாமி ஓபன் டாக்

நடிகர் சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான படம் ‘அஞ்சான்’.

லிங்குசாமி பஞ்ச் :

அந்த சமயத்தில் பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்த படம் அது. முக்கியமாக, ‘கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இதில் இறக்கியிருக்கிறேன்’ என லிங்குசாமி பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.

கவர்ச்சியில் சமந்தா

இந்தப் படத்தில் தான் முதன்முதலில் நடிகை சமந்தா கவர்ச்சி நடிகையாக உருமாறினார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பலமொழிகளில் கவர்ச்சியாகவும் நடித்து விட்டார் நடிகை சமந்தா.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அஞ்சான் படம் படுதோல்வியை சந்தித்தது. அதனால் இயக்குநர் லிங்குசாமிக்கும், நடிகர் சூர்யாவுக்கும் சினிமாத்துறையில் பலத்த சரிவை சந்தித்தார்கள்.

அஞ்சான் ரீ-ரிலீஸ்

அஞ்சான் படத்தின் தோல்வியில் இருந்து இன்று வரை லிங்குசாமி மீளவில்லை என்பது உண்மை. “அஞ்சான்” படமும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கடும் ட்ரோலை சந்தித்தது.
இந்நிலையில், நேற்று படம் ரீ எடிட் செய்யப்பட்டு, தியேட்டர்களில் ‘அஞ்சான்’ படம் ரீ-ரிலீஸானது.

லிங்குசாமி ஓபன் டாக்

அஞ்சான் படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது குறித்து இயக்குநர் லிங்குசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, “சோஷியல் மீடியா ட்ரோலில் சிக்கிய முதல் பெரிய படம் ‘அஞ்சான்’ தான். ஒரு படத்தை ஓவராக ப்ரொமோஷன் செய்யக்கூடாது என அஞ்சான் படத்துக்கு வந்த ட்ரோல்களை பார்த்து பலர் உதாரணமாக எடுத்துக் கொண்டனர்,

இன்றைக்கு இது எல்லோருக்கும் நடக்கிறது, ஆனால் முதலில் தொடங்கப்பட்டது என்னிடம் இருந்துதான். என் குடும்பம், நண்பர்கள் இல்லை என்றால் நான் சினிமாவை விட்டு கிளம்பியிருப்பேன்” என்று கூறினார்.

அஞ்சான் அடுத்து ‘லிங்கா’

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ‘லிங்கா’ படம் தான் அஞ்சான் படத்துக்கு அடுத்தபடியாக சமூக வலைத்தளங்களில் கடுமையான ட்ரோல் செய்யப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.