அமைச்சர் மூர்த்தி நடத்திய திமுக ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் கலந்து கொண்டனர் என்று அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆலோசனை கூட்டம் 

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளின் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மதுரை புறநகர் கிழக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார்

அப்போது அவர் பேசுகையில்,” தமிழ்நாடு முழுவதும் தற்போது தேர்தல் ஆணையத்தால் எஸ்ஐஆர் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது இதில் பாக முகவர்கள் பங்கேற்க வேண்டும். தற்போது பிஎல்ஒவாக. பணியில் பணிபுரியும் அலுவலர்கள் சரியாக நியமிக்கப்படவில்லை குறிப்பாக காலை உணவு திட்டத்தில் உள்ளவர்கள், சுயஉதவி குழுக்களைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளனர் இவர்களுக்கு சரியாக பயிற்சி அளிக்கப்படவில்லை, சரியான பயிற்சி இல்லாதால் திமுக அவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது.

ஸ்டாலினின் ரோடு ஷோ

பாக முகவர்கள் 2 தற்போது நடைபெறும் முகாமில் பங்கேற்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விஷயங்களை அவர்களுக்கு நீங்கள் சொல்லித் தர வேண்டும். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய ஆதரவு அலை உருவாக்கியுள்ளது. கடந்த 172 தொகுதிகளிலும் எழுச்சி பயணத்தில் அவர் செல்லும்போது மக்கள் மிகச்சிறந்த வரவேற்பை அளித்தனர். இதுவரை யாரும் செல்லாத வகையில் 172 தொகுதிகளில் இப்போதே பிரச்சாரத்தை சிறப்பாக நடத்தி விட்டார். இதுபோன்று யாரும் செய்யவில்லை. ஆனால், அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ சென்ற போது ரோட்டில் மக்கள் இல்லை காலியாக தான் இருந்தது. இதன் மூலம் அதிமுகவிற்கு வெற்றி நிச்சயமாகி விட்டது அதனால் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் தவறைச் சுட்டிக்காட்டும் அதிகாரம் உங்களிடத்தில் உள்ளது அலுவலர்கள் தவறு செய்தால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் முறையிட வேண்டும் .

விதிமீறல் 

எஸ்ஐஆர் பணியை திமுக எதிர்க்கிறது.ஆனால், தற்போது திமுக அமைச்சர் மூர்த்தி கிழக்கு தொகுதியில் திமுக பாக முகவர்கள் 2 ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார் அந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பங்கேற்று உள்ளார் .இது நிர்வாக சீர்கேடுக்கு சான்று ,இது ஒரு தவறான முன் உதாரணம். இக்கூட்டத்தில்பங்கேற்றது தவறு இல்லை என்றால் அடுத்த அதிமுக பாக முகவர்கள் 2 ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுவோம். அதில் அவர் பங்கேற்க வேண்டும்

இபிஎஸ் முதல்வராவார் 

திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை 36 மாதம் கழித்து தான் வழங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி 2026-ல் ஆட்சிக்கு வரும்போது மகளிர் உரிமைத்தொகை 1,500 ரூபாயாக வழங்குவார். ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்த போது 2011-ல் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதேபோல தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளார். 2026-ல் திமுகஆட்சிக்கு வர முடியாது .திமுக ஒருமுறை வந்த பின் மறுமுறை ஆட்சிக்கு வந்தது கிடையாது. ஆனால்,அப்படி அதிமுக பல முறை ஆட்சிக்கு வந்துள்ளது. 2026-ம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்” என பேசினார். இந்தக் கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் , அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்
ராஜ்சத்யன் உட்பட பலர் கலந்து கொண்டனர் ‌