விசில் சின்னம் வேண்டும்…தேர்தல் ஆணையத்தை அணுகிய தவெக!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விசில் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி நடிகர் விஜய்யின் தவெக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறஉள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தவெக, தேர்தலில் போட்டியிட விசில் சின்னத்தை ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.

தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், 1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஆணைப்படி, இந்திய தேர்தல் ஆணையத்திடம் விசில், ஆட்டோ ரிக்சா மற்றும் மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்களின் பட்டியலுடன் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.விருப்பத்தேர்வு சின்னங்களின் பட்டியலில் முதலிடத்தில் விசில் சின்னம் உள்ளது.

விசில் சின்னத்தை மக்கள் மத்தியில் எளிதில் கொண்டு செல்ல முடியும் என தவெக தலைவர் விஜய் கருதுகிறார்.எனவே, விசில் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை தவெக அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts

கவர்ச்சிக்கு ஓகே சொன்ன! – இன்ஸ்டாகிராம் குயின் நடிகை

மலையாள திரையுலகில் புகழ்பெற்ற நடிகை ஆர்ஷா சாந்தினி, தற்போது “இன்ஸ்டாகிராம் குயின்” (INSTAGRAM QUEEN) ஆக வலம் வருகிறார். தனது கலக்கல் புகைப்படங்களில் தன் பக்கம் இழுத்து வருகிறாஞர். ‘மல்லிகைப் பூ’வுடன் மலையாள நடிகை இதில் ஆச்சரியம் என்னவென்றால் மற்ற நடிகைகள்…

ஏடிஜி விஜய் சாகரே தலைமையில் 10 பேர் கொண்ட என்ஐஏ குழு களமிறங்கியது!

டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக 10 பேர் கொண்ட குழுவை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைத்துள்ளது. டெல்லி செங்கோட்டை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் கார் திடீரென வெடித்து சிதறியது. இதன் காரணமாக அருகில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *