தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு இவ்வளவு லீவா?

தமிழ்நாட்டில் அடுத்த 2026-ம் ஆண்டுக்கான அரசு விடு​முறை தினங்கள் அரசாணையாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். 2026-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாகும். இவை அரசுத் துறைகள், அலுவலகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும். மேலும், சில விடுமுறைகள் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கே தனிப்பட்டவையாக பொருந்தும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப் பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக ஜனவரி மாதம் 5 நாட்கள் பொது விடுமுறையாகும். மார்ச், ஏப்ரல் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் தலா 3 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1-ம் தேதி (வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு) வணிகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொது விடுமுறையாகும். தைப்பூசம் மற்றும் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

ஏடிஜி விஜய் சாகரே தலைமையில் 10 பேர் கொண்ட என்ஐஏ குழு களமிறங்கியது!

டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக 10 பேர் கொண்ட குழுவை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைத்துள்ளது. டெல்லி செங்கோட்டை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் கார் திடீரென வெடித்து சிதறியது. இதன் காரணமாக அருகில்…

ராஜபாளையம் கோயிலில் இரட்டைக் கொலை…தப்ப முயன்ற கொலையாளி மீது துப்பாக்கிச்சூடு!

ராஜபாளையம் அருகே கோயிலில் காவலாளிகள் இருவரை கொலை செய்த கொலையாளியை  போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *