இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலுக்கு இந்தியா தான் பொறுப்பு என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர். இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு இந்தியா தான் பொறுப்பு என்று பாகிஸ்தான் பிராதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தாக்குதல் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில்,” பாகிஸ்தானை சீர்குலைக்கும் நோக்கில் இந்திய அரசின் பின்னணியில் இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வாணா பகுதியில் நவம்பர் 10-ம் தேதி நடந்த மற்றொரு தாக்குதலுக்கும் இந்தியாதான் காரணம். இந்திய ஆதரவு பயங்கரவாதிகளே இத்தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ளனர்” என்றார்.
பாகிஸ்தான் பிரதமரின் இந்த குற்றச்சாட்டை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


