திருப்பரங்குன்றம்): தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்விமர்சித்துப் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு, அமைச்சர் நிர்மல்குமார் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருநகர் பகுதிக்கு வருகை தந்த அமைச்சர் நிர்மல்குமாரிடம், “தமிழக முதலமைச்சரை டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளாரே?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார்:
“டிடிவி.தினகரன், எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாக காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துரோகிகள் என்று குற்றம் சாட்டியும்தான் தனிக்கட்சியைத் தொடங்கினார். ஆனால், பிற்காலத்தில் தான் யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ, அதே எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்காக ஆளுநர் மாளிகைக்குச் சென்று நின்றார்.
இதன் காரணமாக அவர் பொதுவெளியில் தனது ஒட்டுமொத்த மரியாதையையும் இழந்துவிட்டார். அவரை நம்பி அவருடன் பயணித்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று நடுத்தெருவில் நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதையெல்லாம் அவரும் புரிந்துதான் வைத்திருக்கிறார். ஆனால், கால சூழ்நிலைக்கு ஏற்ப ஆற்று நீரைப் போல வளைந்து கொடுத்து அரசியல் செய்கிறார். தற்போதைய காலம் அவருக்குச் போதாத காலம் எனவே, டிடிவி.தினகரன் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு எதையும் பேசாமல் அமைதியாக இருந்தால் மட்டுமே, அவரிடம் எஞ்சியிருக்கும் சிறிதளவு மரியாதையையாவது அவர் காப்பாற்றிக் கொள்ள முடியும்,” என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

More Stories
அதிமுக எம்.எல்.ஏ.க்களை களவாடிய ‘களவாணி’ விஜய்: டி.டி.வி.தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு!
தூத்துக்குடி: தனித் தனியாக வந்த அமைச்சர்கள்! முத்துக்கோன் விழாவில் முற்றிய மோதல்!
அதிமுகவில் 6 எம்.எல்.ஏக்கள் அவுட்…. சசிகலா நடத்தும் ரகசிய டீலிங்! எடப்பாடி விடுத்த எச்சரிக்கை!!!