September 10, 2026

தவெக அமைச்சர்களுக்கு சபரீசன் வக்கில் நோட்டீஸ்!

தன்னை பற்றி உண்மைக்கு புறம்பான கருத்துகளை பொதுவெளியில் தெரிவித்ததற்காக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல்குமார் மன்னிப்பு கேட்க வேண்டுமென சபரீசன் தரப்பில் வக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனும் தொழிலதிபருமான சபரீசன், தன் மீது எவ்வித ஆதாரமுமின்றி அவதூறான மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியதாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகிய இருவருக்கும் அதிரடியாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பொதுவெளியிலும் ஊடகங்களிலும் தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட இந்த ஆதாரமற்ற அவதூறு கருத்துகளுக்கு எதிராகவே இந்தச் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள், தாங்கள் பேசிய அவதூறு வார்த்தைகளுக்கு அவர்கள் இருவரும் பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அவர்கள் மீது நீதிமன்றத்தில் உரிய சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களின் கீழ் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுச் சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் தொடரப்படும் என்றும் சபரீசன் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் என்ற காரணத்தால் என் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது. அவதூறு கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டு, வீடியோக்களை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா,  நிர்மல்குமாருக்கு சபரீசன்  தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

You may have missed