அமோனியா கசிவு ஏற்பட்ட ஆலையை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார். தொழிற்சாலையில் இருந்து இதுவரை 200 டன் இறால்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிவு காரணமாக 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த ஆலையை நிரந்தரமாக மூட ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது
விசாரணைக் குழுவின் முதற்கட்ட மற்றும் இடைக்கால அறிக்கைகளின்படி, ஆலையில் பல்வேறு கடுமையான பாதுகாப்பு விதிமீறல்கள் இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்குவதற்கு அதிகாரிகள் உடனடியாகத் தடை விதித்து, ஆலையை மூடியுள்ளனர்.
உரிமையாளர்கள் கைது: அலட்சியமாகச் செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் (BNS பிரிவு 105), மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் (BNS பிரிவு 125(A)) மற்றும் குழந்தை தொழிலாளர் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் ஆலை உரிமையாளர்கள் மோகன், ஜோசப் ஜெகன் மற்றும் மேலாளர் டேனியல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நிபுணர் குழு ஆய்வின் அறிக்கையில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 11- ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More Stories
சேலம் நிலத்தகராறு :விவசாயி வெட்டிக்கொலை : சகோதரர்கள் கைது…
ரெய்டு வர்றவங்களை மந்திரி ஆக்கும் ஈனக் காரியத்தை தி.மு.க செய்யாது’: ஆர்.எஸ் பாரதி ஆவேசம்
பெங்களூருவில் நடிகை வீட்டில் பிணமாக கிடந்த நபர்.. அதிர்ச்சியில் திரையுலகம்..