சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு 22 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எம்.ஆர்.பல்லவி. பிரச்சாரத்தின்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த பல்லவிக்கு, ஆண் குழந்தை பிறந்தது.
அப்போது குழந்தைக்கு டிவிகே என பெயரிட போவதாக தெரிவித்திருந்தார். ஏனென்றால், ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்யின் பெயர் ‘தளபதி வெற்றி கொண்டான்’. அதன் சுருக்கமே டிவிகே என்று பேசப்பட்டது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்துக்கு இன்று கைக்குழந்தையுடன் வந்த எம்எல்ஏ பல்லவி, கூட்டம் முடிந்து முதல்வர் விஜய் வீட்டுக்கு புறப்பட்ட நேரத்தில் அவரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு பல்லவி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து குழந்தையை வாங்கி கொஞ்சிய முதல்வர் விஜய், ‘தமிழ் வெற்றிகொண்டான்’ என்று பெயர் சூட்டினார். இதன் சுருக்கமும் டிவிகே என வருகிறது. தனது மகனுக்கு டிவிகே என பெயர் சூட்ட வேண்டும் என்ற ஆசை நிறைவேறியதாக எம்எல்ஏ பல்லவி மகிழ்ச்சியடைந்தார்.

More Stories
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு – 4 முனை போட்டி தீவிரம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!