நெல்லையில் பிளஸ் 2 மாணவியிடம் திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த பெயின்டரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (28). பெயிண்டர். இவர் நெல்லை பகுதியைச் சேர்ந்த பிளஸ்2 படித்து வரும் ஒரு மாணவியை காதலிப்பதாக கூறி அவரிடம் நெருங்கி பழகினார்.
மேலும் திருமணம் செய்து கொள்வதாக மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பெருமாள் தனிமையாக அழைத்துச் சென்று 2 நாட்கள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனை தொடர்ந்து மாணவி நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பெருமாள் அந்த மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது
இதுகுறித்து டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து தாழையூத்திலுள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பெருமாளை நேற்று இரவில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

More Stories
செல்போன் பேசிக்கொண்டே ஓட்டியதால் ஆட்டோ கவிழ்ந்து மாணவர்கள் உள்பட 8 பேர் காயம்…
நர்சின் இடுப்பை கிள்ளிய பிடிஓ: வெளுத்து வாங்கிய சகோதரர்…
ஆகாஷ் மரண வழக்கு- போலீசார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்…