சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது பெண் யூடியூபர் ஒருவர் பண மோசடி புகார் அளித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
காது கூச சர்ச்சை கருத்துக்கள் பேசி சிலரின் பர்சனல் வாழ்க்கையில் தலையிட்டு சோசியல் மீடியாவில் வில்லங்கமானவர் தான் சூர்யா தேவி. பேசக் கூடாததை பேசி சிக்கலில் சிக்கி கேஸ் எடுத்து ஜெயில் வரை விசிட் அடித்து தண்டனையும் பெற்றவர். கொரோனா காலத்தில் பீக்கில் இருந்தவர். கடந்த சில வருடங்கள் சைலன்டாக இருக்க, தற்போது சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது பணம் மோசடி புகார் அளித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்ற சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் தனக்கு நீண்ட காலமாக நண்பராக இருந்ததாகவும், அதன் பெயரில் 2019 நவம்பரில் 2 லட்சத்து 10 ஆயிரம் கடன் வாங்கி தற்போது வரை திருப்பி தராமல் இழுத்தடிப்பதாகப் புகார் அளித்துள்ளார்.
தனது தங்கையின் திருமண செலவிற்காக தேவைப்படுவதாகவும், மூன்றே மாதங்களில் திருப்பி தருவதாகவும் கூறியதாலே விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கையில் பணத்தை கொடுத்ததாக சூர்யா தேவி கூறியுள்ளார்.
பல வருடங்களாகப் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுக்க, 2026 மே 22-ஆம் தேதி மதுரையில் தனியார் திருமண மண்டபத்தில் ஒரு எக்ஸ்போ நடப்பதாகவும், அதில் வந்து தன்னை சந்திக்குமாறு நாஞ்சில் விஜயன் கூறியதாகவும் சூர்யா தேவி கூறியுள்ளார்.
அங்கு சென்றபோது பணத்தை வழங்குவதற்குப் பதிலாகத் தன்னை அவமதிக்கும் வகையில் பேசியதுடன், அங்கு இருந்த சிலர் தன்னை மிரட்டி தாக்கியதாகவும், அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ததாகவும் சூர்யா தேவி புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தன்னை தாக்கியதாக நாஞ்சில் விஜயன் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம், சூர்யா தேவி கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், வி.ஜே.வைஷு தொடர்பான விவகாரத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்ட போது, வைஷூவை “ஆப் செய்ய முடியுமா” என நாஞ்சில் விஜயன் தன்னிடம் கேட்டதாகவும் சூர்யா தேவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

More Stories
திருமணமான 48 நாட்களில் இளம்பெண் தற்கொலை…
“முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளார். அதனால், தவெகவில் இணைந்தேன்”
ஐஎஸ்ஐ ஆதரவு குழுவுடன் தொடர்பு: டெல்லியில் 5 பேர் கைது…