திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே மூடப்பட்டிருந்த டாஸ்மாக் பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள், நியாயம் கேட்ட பார் உரிமையாளரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது போலீசார் தவெக நிர்வாகிகள் 4 பேரை கைது செய்துள்ளனர். தவெக ஆட்சி அமைத்தவுடன் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய அரசு டாஸ்மாக் கடை மற்றும் பார்கள் மூடப்பட்டன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊதியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு டாஸ்மாக் பாரானது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மூடப்பட்டது.
தற்போது கடையில் உள்ள கேமரா, டேபிள் உள்ளிட்டபொருட்கள் திருட படாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஒரு பாதுகாவலர் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் கார்த்திக், முத்துக்குமார், வலுப்பூரான், பிரகாஷ் ஆகிய நான்கு பேர் மது போதையில் இந்த பகுதியில் மூடப்பட்டிருந்த பாருக்கு சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரிடம் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

More Stories
தொழில் முதலீட்டு மாநாடு: முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம்
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டனர் !
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது