பெரம்பலூர் அருகே டி.களத்தூர் பிரிவு சாலையில் இன்று காலை நடந்த கோர விபத்த்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சங்கர்(37), அரியலூரைச் சேர்ந்த விஜய்(30) உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். மற்றொரு நபரின் அடையாளம் காணப்படவில்லை.
பெரம்பூரைச் சேர்ந்த சங்கர், தன்னுடைய நண்பர்களான அரியலூர் மாவட்டம் அண்ணாசிநல்லூரைச் சேர்ந்த விஜய் உள்ளிட்ட நண்பர்களுடன் காரில் பெரம்பலூர் அருகே துரையூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து நேரிட்டது.
இதில் காரில் வந்த மூவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மூவரின் உடல்களைக் கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து தெலங்கானாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜலீல் பாஷா என்பவரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் , அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

More Stories
திருப்பரங்குன்றம் பாமக ஒன்றிய செயலாளர் தாயார் தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு கைது செய்யாத ஆஸ்டின்பட்டி போலீசார் தெய்வம் தரப்பில் குற்றம் சாட்டு!
சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்புள்ள 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள முக்கியத் தனியார் தொழிற்சாலைகளில் முதல்-அமைச்சர் ஆய்வு