விழுப்புரம் மாவட்டம் கரசானூரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த திரவுபதிஅம்மன் கோயிலில் கடந்த 25 ஆண்டுகளாக தானமாக கிடைக்கப்பெற்ற சுமார் 50 பவுன் நகைகள் கோயில்அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோயில் திருவிழா முடிவடைந்து நகைகளை கணக்கு பார்த்து மீண்டும் அதேஇடத்தில் வைக்கப்பட்டன.
இந்நிலையில் தனிநபர்கள் 6 பேர் சேர்ந்து கிராம மக்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், கூட்டம் நடத்தாமல் அந்த நகைகளை எடுத்துச்சென்று உருக்கி விற்றுவிட்டனர். அதில் கிடைத்த பணத்தை கையாடல் செய்துவிட்டனர்.
அவர்களிடம் கிராம மக்கள் சென்று நகைகளை கேட்டபோது புதுச்சேரியில் உள்ள ஒரு நகைகடையில் விற்பனைசெய்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே கோயில் நகைகளை எடுத்து விற்பனை செய்து கையாடல் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

More Stories
சென்னையில் கொடூரம்: தூங்கிக் கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை; மனைவி கைது!
மதுரையில் அடுத்தடுத்து அதிர்ச்சி: ஒரே நாளில் நிகழ்ந்த 3 படுகொலைகளால் மக்கள் பீதி!
தொழில் முதலீட்டு மாநாடு: முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம்