தமிழ் சினிமாவின் ‘இயக்குனர் இமயம்’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜா இன்று உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அவரின் மறைவிற்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
ஆளுநர் அர்லேகர் தனது இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவால் மிகுந்த துயரமடைந்தேன் இன்று . கிராமிய வாழ்வையும் மனித உணர்வுகளையும் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்திய அவரது படைப்புகள் தமிழ் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்துள்ளன.
தனித்துவமான கதைசொல்லல் மற்றும் கிராமிய வாழ்வியலின் ஆழமான சித்தரிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமாவை மாற்றியமைத்த உண்மையான முன்னோடி என்று மறைந்த இயக்குனர் இமயத்திற்கு புகழாரம் சூட்டி இருக்கிறார். இந்திய சினிமாவில் அவரது பங்களிப்புகள் அழியாத முத்திரையைப் பதித்துள்ளன; மேலும் பல தலைமுறை திரைப்படப் படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் அவர் உத்வேகமாகத் திகழ்ந்தார். அவரது திரைப்படங்கள் மண்ணின் ஆன்மாவையும் மனித உணர்வுகளின் செழுமையையும் இணையற்ற நம்பகத்தன்மையுடன் பிரதிபலித்தன.
இந்த சூழலில் மறைந்த பாரதிராஜா குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று ஆளுநர் அர்லேகர் தனது இரங்கல் செய்தியில் கூறி இருக்கிறார்.

More Stories
அடுத்தடுத்து 7 வீடுகளில் ஏசி காப்பர் திருட்டு…
திரைப்பட இயக்குநரின் 8 வயது மகன் மீது போதை கும்பல் தாக்குதல்:
போதையில் தகராறு மதுபாட்டிலால் குத்தி திருநங்கை படுகொலை: