பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக, எஸ்பி லலித்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை போலீஸார் தீவிர சோதனை நடத்தியதில், பாடாலூர் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்ததையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் அங்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்று வந்த, பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் உமேஷ் (36). என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அரசு டாஸ்மாக் கடையில், மதுபானங்களை வாங்கி வந்து, சட்டவிரோதமாக விற்று பணம் சம்பாதித்தது வருவது தெரிய தெரியவந்தது. பின்னர், உமேஷிடம் இருந்த சுமார் 40 மதுபுட்டிகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அவரை, பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். உமேஷ் ஆலத்தூர் ஒன்றிய செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தப்பி ஓடிய அவரு கூட்டாளியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

More Stories
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு மீது இன்று கோர்ட்டில் விசாரணை!
நெல்லை இரட்டைக் கொலை வழக்கு: தொடர்புடைய கடைசி நபரும் கைது – மொத்தமாக 18 பேர் சிக்கினர்!
நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம்: ஊழியர் அதிரடி இடைநீக்கம் -உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் உத்தரவு