இலங்கையின் கொழும்பு அருகே கழுதாரா மாவட்டத்தின் அங்குவார்வொட்டா பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் மாலை திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புத்துறையினர், தீயைக்கட்டுப்படுத்தி 51 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயந்துள்ளது. மேலும் 9 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்
அவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்து நடந்த நேரத்தில் முதியோர் இல்லத்தில் சுமார் 72 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது

More Stories
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மீதான மக்களின் நம்பிக்கை, 37 சதவீதமாக சரிந்துள்ளதாக கருத்துக்கணிப்பு
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…
“முதலமைச்சர் விஜய் சர்வாதிகாரப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்…” – டிடிவி தினகரன்