கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள வடக்குத்து பகுதியில் வசித்து வந்தவர் 30 வயதான ஸ்டீபன் ராஜ். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தனது 8 வயது மகன் ஜஸ்வந்த் ராஜ் உடன் தனியாக வசித்து வந்துள்ளார். குழந்தை பிறந்த உடனேயே அவரது மனைவி உயிரிழந்து விட்டார். இதனால், கடந்த எட்டு ஆண்டுகளாக குழந்தையை ஸ்டீபன் ராஜே கவனித்து வந்திருக்கிறார்.
இந்தநிலையில் திங்கட்கிழமை இரவில் சென்னையில் உள்ள தனது தாயாருக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அம்மா உங்களை விட்டு பிரிந்து செல்கின்றோம் என உருக்கமாக கூறியுள்ளார். இதையடுத்து காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால், அருகில் உள்ளவர் சென்று பார்த்தபோது வீட்டிற்குள் ரத்தக்கறை படிந்திருந்ததை கண்டு அதிச்சியடைந்துள்ளனர்
உடனே, நெய்வேலி டவுன்ஷிப் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று ஆய்வு செய்தனர். அங்கு, ஸ்டீபன் ராஜ் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். அவரின் மகன் ஜஸ்வந்த் ராஜ் படுக்கையிலேயே கழுத்தறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். பின்னர். இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் கடந்த எட்டு ஆண்டுகளாகவே தனது குழந்தையை பார்த்துக் கொள்வது மற்றும் பள்ளிக்கு அனுப்புவது போன்ற பணிகளை ஸ்டீபன் ராஜே தனியாளாக கவனித்து வந்தது தெரியவந்தது. இதனால் அவர் பணிக்கு செல்வது முதல் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்ததாக அருகில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். இந்த சூழலில் வியாழக்கிழமை பள்ளி திறக்க உள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, மீண்டும் தனது மகனை பள்ளிக்கு தயார்படுத்தி அனுப்பி, தானும் வேலைக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்படும் என்று அவர் நினைத்திருக்கலாம் என தெரிகிறது. எனவே, பெற்ற மகனை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடைசியாக ஸ்டீபன் ராஜ், தனது தாயாருக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்-ல் என்ன கூறியிருந்தார் என்ற முழு விவரம் கிடைத்தால் விபரீத முடிவுக்கான காரணம் தெரியவரலாம் என போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

More Stories
விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள்…
என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” – தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு…
‘திருக்குறள் சவால்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டானியா மில்க் பிகிஸ்…