மகாராஷ்டிராாவைச் சேர்ந்த ராகவேந்திரா கிஷோர் அவஸ்தி (36), திருமண இணையதளம் மூலம் நாக்பூரைச் சேர்ந்த 31-வயது பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.
தன்னை விவாகரத்து பெற்றவர் என அறிமுகம் செய்த ராகவேந்திரா, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன் பின் புதிதாக உடற் பயிற்சி மையம் தொடங்கவுள்ளதாக கூறி அந்தப் பெண்ணிடம் ரூ.14.8 லட்சம் ராகவேந்திரா பெற்றுள்ளார்.
ஒரு முறை தனியாக சந்தித்தபோது அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ராகவேந்திரா விவாகரத்து பெற்றவர் அல்ல என்பதை அறிந்த அந்தப் பெண், தன்னை ஏமாற்றிவிட்டாக நாக்பூர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து ராகவேந்திராவை நாக்பூர் போலீஸார் கைது செய்தனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை செய்து மிரட்டல்: தென்காசி கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
ரேஷன் கடைகளில் கிலோ ரூ.15-க்கு கோதுமை மாவு: தமிழக அரசு அதிரடி முடிவு!