September 10, 2026

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் – உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!

திமுக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி வந்தவுடன் ஆன்லைன் சூதாட்டதிற்கு தடை விதிக்க கூடிய முக்கியமான சட்டத்தை இயக்கியது.

பொது மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஆன்லைன் சூதாட்டதினால் தொடர் தற்கொலை நடந்து வந்தது இதனை கருத்தில் கொண்டு இந்த சட்டத்தை திராவிட மாடல் அப்பொழுது இயக்கியது.

சென்னை, கர்நாடகா உயர்நீதிமன்றங்கள் இந்த சட்டத்திற்கு தடை விதித்தது. அந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. அந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என அறிவித்துள்ளது. சென்னை, கர்நாடகா உயர்நீதிமன்றங்களின் தடை உத்தரவு தவறானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது சரி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

You may have missed