September 10, 2026

மதுரையில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி காக்ரோச் பேரணி….

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி மதுரையில் காக்ரோச் பேரணி நடத்தினர். பட்டதாரி இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என பதாகைகள் ஏந்தி மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து தமுக்கம் மைதானம் வரை இளைஞர்கள் பேரணி நடத்தினர்.

வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக விவாதமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து “Cockroach Janata Party” என்ற பெயரில் உருவாக்கப்பட்ட சமூக வலைதள பக்கம் சில நாட்களில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may have missed